சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் இலவச மருத்துவ முகாம்
சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஆறுமுகநேரி:
சாகுபுரம் டி.சி. டபிள்யு. தொழிற்சாலை, சாகுபுரம் ஆன்மா சங்கம், சாகுபுரம் அரிமா சங்கம் மற்றும் நெல்லை ஷிபா மருத்துவமனை இணைந்து தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்கள், தொழிலாளர்கள், குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தினர். சாகுபுரம் கலையரங்கத்தில் நடந்த முகாமை டி.சி. டபிள்யு தொழிற்சாலை மூத்த செயல் உதவி தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தார்.
முகாமில் ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் பாலா, அகமது யூசுப், பாவங்கர், வெங்கடேஸ்வரி, மற்றும் 50-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் இ.சி.ஜி. எக்கோ, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எலும்பு, பல், கண் போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. முகாமில் நந்தினி சீனிவாசன், தொழிற்சாலை உதவி தலைவர் சுரேஷ், மக்கள் தொடர்பு அதிகாரி, தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.