சைனிக் பள்ளியில் மண்டலங்களுக்கு இடையேயான கலைப்போட்டி
அமராவதி சைனிக் பள்ளியில் மண்டலங்களுக்கு இடையேயான கலைப்போட்டி நடந்தது.
அமராவதி சைனிக் பள்ளியில் மண்டலங்களுக்கு இடையேயான கலைப்போட்டி நடந்தது.
சைனிக் பள்ளி
வானுயர்ந்த மலைகளைத் தழுவும் மேகங்கள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணையை பின்னணியாகக் கொண்டு சைனிக் பள்ளி அமைந்து உள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியில் உருவாகி எண்ணற்ற அதிகாரிகளை நாட்டுக்கு உருவாக்கித் தந்து பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
சி.பி.எஸ்.இ. வாரிய பாடத் திட்டத்தின் படி பிளஸ்-2 வரை ராணுவ சார்புடன் பொது பள்ளிக்கல்வியை ஆங்கில மொழியுடன் கற்பிக்கும் இந்தியாவின் 33-வது பள்ளியாக தோற்றுவிக்கப்பட்டு இன்று வரையிலும் சீரும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சியுடன் விளையாட்டுக்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
அமராவதி சைனிக் பள்ளியில் மண்டலங்களுக்கு இடையேயான கலைப்போட்டி நடந்தது.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டிற்கான அகில இந்திய அளவிலான மண்டலங்களுக்கு இடையேயான கலைப் போட்டிகள் நடைபெற்றது.
சைனிக் பள்ளி சங்கம் முதன் முதலாக நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கேப்டன் நிர்மல் கே.ரகு முன்னிலை வகித்தார். சைனிக் பள்ளி கொருகொண்டா (ஆந்திரா), சைனிக் பள்ளி சந்திரபூர் (மகாராஷ்ட்ரா), சைனிக்பள்ளி மெயின்பூரி (உத்தரபிரதேசம்), சைனிக்பள்ளி நாலந்தா (பிஹார்) உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன.
இவற்றுக்கு இடையே குழு பாடல் போட்டி, கருவி இசை, மைம் (ஊமைநாடகம்), குறுநாடகம் மற்றும் குழு நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
சைனிக் பள்ளி சந்திராபூர் குழு பாடல் மற்றும் குழு இசைக்கருவிக்கான போட்டியில் வெற்றி பெற்றது. சைனிக் பள்ளி கொருகொண்டா மைம் போட்டியில் வென்றது.
சைனிக் பள்ளி மெயின்பூரி குழுநடனப் போட்டியிலும் சைனிக் பள்ளி நாலந்தா குழு நாடகப் போட்டியிலும் சைனிக்பள்ளி சந்திராபூர் ஒட்டுமொத்த கோப்பைக்கான வாகையர் பட்டத்தையும் வென்றது. போட்டிக்கு சீனிவாசன், சக்ரதாரா பிரஸ்டி, சத்தியபாமா ஆகியோர் நடுவர்களாக பங்கு வகித்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை லெப்டினன்ட் கர்னல் தீபு செய்திருந்தார். இதில் மூத்த ஆசிரியர் பால்ராஜ் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் மற்றும் அனைத்து கேடட்களும் கலந்து கொண்டனர்.