புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா


புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:47 PM GMT)

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடந்தது. உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன் அடிகளார் கொடி பவனியை வழிநடத்தினார். வேளாங்கண்ணி திருத்தல பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் உருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வருகின்ற டிசம்பர் 2-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், தேர் பவனியும் நடைபெறுகிறது. 3-ந்தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.


Next Story