எட்டயபுரத்தில் சைவ வேளாளர் சங்க கூட்டம்
எட்டயபுரத்தில் சைவ வேளாளர் சங்க கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் சைவ வேளாளர் சங்க கூட்டம் திருநாவுக்கரசர் திருமடாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சமுதாயத் தலைவர் சங்கர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மீனாட்சி சுந்தரம், பிச்சைகுட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகின்ற செப்.5-ந்தேதி வ.உ சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சைவ வேளாளர்களுக்கு பாத்தியப்பட்ட எட்டயபுரம் பொது நந்தவனத்தை சீர் செய்யவும், பத்தாம் வகுப்ப, பிளஸ்-2 வகுப்பு படிக்கும் சமுதாய மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றால் பரிசு வழங்கி கவுரவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க செயலாளர் ஆவுடை நாயகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story