நகை மதிப்பீட்டாளர்களுக்குசம்பளம் வழங்க வேண்டும்
கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களுக்குசம்பளம் வழங்க வேண்டும்-கலெக்டரிடம் மனு
ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்க தலைவர் ஜான்விக்டர் தாஸ் தலைமையில் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளர்களாக பணிபுரியக்கூடியவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் நகை மதிப்பீட்டாளர்கள் பணியிடங்களில் இருந்து பணியாற்றுபவர்களிடம் பணியாளர் பாதுகாப்புத் வைப்புத்தொகை கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 லட்சமும், சங்கங்களில் ரூ.10 ஆயிரமும் வாங்கப்பட்டு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் நகை மதிப்பீட்டாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் கமிஷன் அடிப்படையில் அதாவது கூட்டுறவு வங்கிக்கு நகை அடகு வைக்க வரும் வாடிக்கையாளரிடம் இருந்து நகை மதிப்பீட்டாளர் கமிஷன் வாங்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதுவரை எந்தவித சம்பளமும் கொடுப்பதில்லை. நகை மதிப்பீட்டு பணியாளர்கள் மற்ற பணியாளர்கள் போல் சரியான நேரத்தில் வந்து வங்கி முடியும் நேரத்தில் தான் செல்ல வேண்டும். எனவே அவர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் சம்பளம் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.