தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்


தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்
x

திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்

திருவாரூர்;

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. மாநிலத் துணைச்செயலாளர் ஜூலியஸ், மாநில மாவட்ட பொருளாளர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.இந்த திட்டத்திற்கு சமையல் பணி மேற்கொள்ளுதல் மற்றும் உணவு பரிமாறும் பணிகளை பள்ளியின் சத்துணவு பணியாளர்களிடமே வழங்கி செயல்படுத்துவது எளிதாக இருக்கும். எனவே இந்த பணிகளை சத்துணவு பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story