கஞ்சா விற்பனை; தம்பதி கைது


கஞ்சா விற்பனை; தம்பதி கைது
x

கஞ்சா விற்பனை; தம்பதி கைது

திருநெல்வேலி

அம்பை:

அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் நேற்று அம்பை அரசு கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக பிரம்மதேசத்தைச் சேர்ந்த சின்னதம்பியை (வயது 52) போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி ரஞ்சனியையும் (42) கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.


Next Story