கரூர் ரெயில் நிலையத்தில் முருங்கை பொருட்கள் விற்பனை


கரூர் ரெயில் நிலையத்தில் முருங்கை பொருட்கள் விற்பனை
x

கரூர் ரெயில் நிலையத்தில் முருங்கை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

கரூர்

ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் பிரபலமான பொருட்கள் ரெயில் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் கரூர் ரெயில் நிலையத்தில் நேற்று முருங்கை பொருட்கள் விற்பனை தொடங்கியது. கரூர் ரெயில் நிலைய மேலாளர் ராஜராஜன் முதல் விற்பனையை தொடங்கி வைத்து, பயணிகளுக்கு பொருட்களை வழங்கினார். ஈசநத்தம் விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் 15 நாட்களுக்கு கரூர் ரெயில் நிலையத்தில் முருங்கை மற்றும் சிறுதானியங்களால் ஆன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு முருங்கை இலை சூப் பவுடர், முருங்கைக்காய் சூப் பவுடர், முருங்கை இலை இட்லி பொடி, முருங்கை இலை சாதப்பொடி, முருங்கை இலை லட்டு, கம்பு லட்டு, ராகி லட்டு, சிறுதானிய கலவை லட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணா, ஜி.ஆர்.பி. சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story