தங்க பத்திரம் விற்பனை


தங்க பத்திரம் விற்பனை
x

கோவில்பட்டி கோட்டத்தில் இன்று முதல் தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தங்க பத்திரத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திர விற்பனை அஞ்சலகங்கள் மூலமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,197 ஆகும். கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை தபால் நிலையங்களிலும், அனைத்து துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திர விற்பனை நடக்கிறது. தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தனிநபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து தங்கத்தின் விலைக்கு முதிர்வடையும் நாளில் தங்கத்துக்கு நிகரான பணமும் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் கார்டு கட்டாயம் தேவை. அதனுடன் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல் ஆகியவற்றை கொடுத்து தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story