பிளாஸ்டிக் பைகள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது


பிளாஸ்டிக் பைகள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பைகள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மயிலாடுதுறை நகர் நல அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகர் நல அலுவலர் டாக்டர் லட்சுமிநாராயணன் கூறுகையில், மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றி அழித்து வருகிறோம். மேலும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை நகரில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வருகிறோம். மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. மேலும். மண்வளத்தை கெடுத்து விடுகிறது. மழைநீர் நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடுத்து நீர் ஆதாரம் தடைபடுகிறது. இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், வணிகர்கள் யாரும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.


Next Story