பழனி பஸ் நிலையத்தில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை


பழனி பஸ் நிலையத்தில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை
x
தினத்தந்தி 18 Sept 2023 2:30 AM IST (Updated: 18 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

பழனி பஸ் நிலையத்தில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

திண்டுக்கல்

பழனி பஸ் நிலையத்துக்கு சுற்றுவட்டார கிராம மக்கள், வெளியூர் பக்தர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பயணிகளை மையப்படுத்தி ஓட்டல், டீக்கடைகள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன. அதேபோல் சிலர் கைகளில் வைத்து திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழங்கள், மிட்டாய், வெள்ளரி போன்றவற்றை நேரடியாக பயணிகளிடம் விற்று வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பழனி பஸ் நிலையத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதாவது வெள்ளரி, பழங்கள் போன்றவற்றை விற்பனைக்காக பாலித்தீன் பைகளில் அடைத்து வைப்பதற்காக பஸ்நிலைய பகுதியில் அவற்றை தயார் செய்கின்றனர். ஆனால் அந்த பொருட்கள் கூடைகளில் வைக்கப்படாமல் திறந்த வௌியில் போடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் அதனை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே பழனி பஸ்நிலையத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை விற்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story