சேலம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நலனுக்காக கோடி அர்ச்சனை சிறப்பு வழிபாடு


சேலம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நலனுக்காக கோடி அர்ச்சனை சிறப்பு வழிபாடு
x

சேலம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நலனுக்காக கோடி அர்ச்சனை சிறப்பு வழிபாடு நடந்தது.

சேலம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குரு பங்காரு அடிகளாரின் 83-வது அவதார திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள செவ்வாடை பக்தர்கள் உலக நலனுக்காக குரு போற்றி கோடி அர்ச்சனை செய்ய ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்கள், வழிபாட்டு மன்றங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று காலை உலக நலனுக்காக கோடி அர்ச்சனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் மற்றும் பங்காரு அடிகளாரின் தொண்டர்களும் கலந்து கொண்டு சுமார் 3 மணி நேரம் இடைவிடாமல் கோடி அர்ச்சனை செய்து இணையவழியில் நடந்த இந்த சிறப்பு கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் சந்திரமோகன், சக்தி பீடத்தின் நிர்வாகி அருள்மொழி ஆகியோர் தலைமையில் பொறுப்பாளர்கள் செல்வம், பாலாஜி, மோகன், சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல், சங்ககிரி, மேட்டூர், தங்கமாபுரிபட்டணம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களிலும் நேற்று உலக நலனுக்காக பக்தர்களின் கோடி அர்ச்சனை சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story