சேலம் கோட்டை மாரியம்மன், பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சேலம் கோட்டை மாரியம்மன், பெருமாள் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
சேலம் கோட்டை மாரியம்மன், பெருமாள் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
பெருமாள் கோவில்
சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று சேலம் வந்தார். முன்னதாக அவர் சேலம் கோட்டை பெருமாள் கோவிலுக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து விவரம் கேட்டு அறிந்தார். முன்னதாக அவர் கோவிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார்.
அறிவுரை
அதன் பிறகு கோட்டை மாாரியம்மன் கோவிலுக்கு சென்ற அவர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து ஆய்வு ெசய்தார். பின்னர் திருப்பணி குறித்து விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
கோவில் திருப்பணிகள் நடைபெறுவது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து, விரைந்து பணியை முடித்து, கும்பாபிஷேகத்திற்கான தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அவர் கோவிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார்.
இந்த ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், கலெக்டர் கார்மேகம், பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.