திருப்பத்தூர் பகுதிகளில் களிமண் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பு
திருப்பத்தூர் பகுதிகளில் களிமண் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.
திருப்பத்தூர் பகுதிகளில் களிமண் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விமர்சியாக கொண்டாடப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி விநாயகர் சிலை விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.
திருப்பத்தூர் கச்சேரி தெரு, தொட்டி தெரு, நகர போலீஸ் நிலையம் அருகில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சிறிய வடிவிலான களிமண் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்தன. இந்த சிலைகள் ரூ.150 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டன. இதேபோல பூஜை பொருட்களான தேங்காய். பழம், பூமாலை, அருகம் புல், எருக்கம் பூ மாலை, கரும்பு, விளாம்பழம், கம்பு, சோளம் போன்றவற்றின் விற்பனையும் களைகட்டியது.
பூ மார்க்கெட்டில் மொத்தவிலையில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.700 முதல் ரூ.800 வரையும், முல்லைப் பூ ரூ.700 முதல் விற்பனையானது. சாமந்தி ரூ.160 முதல் ரூ.200 வரையும், ஜாதி மல்லி ரூ.300 வரையும் விற்பனையானது. சில்லறை விற்பனையில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.1,000 வரை விற்கப்பட்டது.