தர்ப்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பு


தர்ப்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பு
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடைகால சீசன் தொடங்கியுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

கோடைகால சீசன் தொடங்கியுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோடைகால சீசன்

தமிழகத்தில் கோடைகால சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் தற்போது கோடைகால வெயில் சுட்டெரிக்கிறது. வழக்கமாக ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்து தான் கோடைகால வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் என மாவட்டம் முழுவதுமே கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது.

விற்பனைக்கு குவிந்த தர்ப்பூசணி பழங்கள்

இந்த நிலையில் கோடைகால சீசன் தொடங்கியுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பாரதி நகர், பட்டணம்காத்தான், அரண்மனை சாலை, கிழக்கு கடற்கரை சாலை என பல்வேறு இடங்களிலும் தண்ணீர் பழம் என்று சொல்லக்கூடிய தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள இந்த தர்ப்பூசணி பழங்களை பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தர்ப்பூசணி பழத்தில் அதிக தண்ணீர் சத்து இருப்பதாலும் தற்போது கோடைகால சீசன் தொடங்கியுள்ளதாலும் மக்கள் குழந்தைகளுக்கு இந்த பழங்களை கொடுப்பதில் மிகுந்த ஆர்வமுடன் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும் போது, தற்போது தான் கோடை காலத்தை முன்னிட்டு தர்ப்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்படுகிறது. இன்னும் வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.


Related Tags :
Next Story