விற்பனையாளர் பணியிடை நீக்கம்


விற்பனையாளர் பணியிடை நீக்கம்
x

ஒரத்தநாடு அருகே நியாயவிலைக்கடையில் முறைகேடு தொடர்பாக விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

ஒரத்தநாடு அருகே நியாயவிலைக்கடையில் முறைகேடு தொடர்பாக விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு

நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வினியோகம்செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் தரமாகவும், முறைகேடுகள் இன்றியும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என தமிழகஅரசு அறிவுறுத்தியுள்ளது. நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் தரமாக வழங்கப்படுகிறதா? என அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பொன்னாப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் செயல்படும் பொன்னாப்பூர் (மேற்கு) நியாய விலைக் கடையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நியாய விலைக் கடையில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டது.இதனால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, விற்பனையாளர் ராஜேஸ்குமார் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


Next Story