கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் அருகே பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கோடை மழை
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை திடிரென்று மழை பெய்தது. இதனால் வேதாரண்யம் பகுதியில் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு பாத்திகள் முற்றிலும் சேதம் அடைந்தது.
உப்பு பாத்திகளில் மழைநீர்...
இதனால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேமித்து வைத்துள்ள உப்பை தார்பாய் கொண்டு மூடி உற்பத்தியாளர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். உப்பள பகுதியில் கடல் போல் மழைநீர் தேங்கி உள்ளதால் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க இன்னும் 15 தினங்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.