துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம்


துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம்
x

பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வேலூர்

ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை சார்பில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வீரவணக்க நான் அனுசரிக்கப்பட்டது. அதில் அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், அமலு எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் பங்கேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், துப்பாக்கிக்குண்டுகள் முழங்க விரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கருப்புப்பட்டை அணிந்திருந்தனர்.


Next Story