சிதம்பரேஸ்வரர் கோவிலில் சமபந்தி
கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் சமபந்தி மனைவியுடன் கலெக்டர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
குடியரசு தின விழாவையொட்டி ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் சமபந்தி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், அவரது மனைவி சாந்திபிரியா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமமாக அமர்ந்து உணவு அருந்தினர். இதில் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கவியரசு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவகாரன், செயல் அலுவலர் சங்கர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story