சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி வருமானம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி வருமானம் கிடைத்தது.
திருச்சி
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.ஒரு கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 655-ம், 2 கிலோ, 361 கிராம் தங்கமும், 4 கிலோ 657 கிராம் வெள்ளியும் மேலும், 111 அயல் நாட்டு பணம் மற்றும் 514 அயல் நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story