தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாம்சன் பொறுப்பு ஏற்பு


தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாம்சன் பொறுப்பு ஏற்பு
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சாம்சன், ‘போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும்’ என்று கூறினார்.

தென்காசி

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணராஜ் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாம்சன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும். பொதுமக்களின் மனுக்கள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு அதற்கு உரிய தீர்வு காணப்படும். கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பணி தீவிரப்படுத்தப்படும். தமிழக-கேரள எல்லைப்பகுதியில் காவல் பலப்படுத்தப்படும். போலீசாருக்கு குற்ற செயல்கள் நடைபெறுவது குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வந்த அவருக்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தாமரை விஷ்ணு அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


Next Story