மணல் வழங்குவதில் முன்னுரிமை: லாரி டிரைவர்கள் போராட்டம்
கரூர் அருகே மணல் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என கூறி லாரி டிரைவர்கள் திடீர் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு உள்ளூர், வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் கரூர் மற்றும் பிற மாவட்டங்களில் மணல் விற்பனை செய்யப்படுகிறது. இதில், கரூர் அருகே உள்ள நாவல் நகர் எதிரே லாரிகள் காத்திருக்கும் இடம் உள்ளது.
இங்கு உள்ளூர், வெளியூர் என நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்படுகின்றன. உள்ளூர் மற்றும் வெளியூர் லாரிகளுக்கு மணல் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாகவும், அடிப்படை வசதி கேட்டும் லாரி டிரைவர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், உங்கள் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.