மணல் கடத்தல்; 3 பேர் கைது
திருச்சிற்றம்பலம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துறவிக்காடு குப்பான் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் ராஜதுரை (வயது 20), கலைஞர் மகன் சரவணன் (23), கிருஷ்ணன் மகன் போத்திராஜா (25) ஆகிய 3 பேரும் அக்னி ஆற்றில் இருந்து மணலை கடத்தி சென்று விற்பனை யெ்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்னி ஆற்றில் இருந்து மணலை மாட்டு வண்டிகளில் கடத்தி வந்த ராஜதுரை, சரவணன், போத்திராஜா ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.