மணல் கடத்தல்; 4 பேர் மீது வழக்கு
விருத்தாசலம் அருகே மணல் கடத்தல்; 4 பேர் மீது வழக்கு
கடலூர்
விருத்தாசலம்
விருத்தாசலத்தை அடுத்த ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான போலீசார் நேற்று முத்தனங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோட்டேரி, வாத்தியார் தெருவை சேர்ந்த சக்திவேல்(வயது 40), பழனிவேல்(59), கோட்டேரி ராகவன்குப்பம் பகுதியை சேர்ந்த ராமு(27), அதேபகுதியை சேர்ந்த குழந்தைவேல் ஆகியோர் மாட்டு வண்டியில் ஓடைமணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதை அறிந்த போலீசார் விரைந்து சென்று ஒடை மணல் கடத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்து சக்திவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story