அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது


அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது
x

கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை போலீசார் தீவீர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்புறம்பியம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்புறம்பி யத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சிவா (வயது26) என தெரியவந்தது. மேலும் சுவாமிமலை அருகே கங்காதரபுரம் காவிரி ஆற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த பம்பப்படையூர் ராமன்(52), கங்காதரபுரம் தங்கசாமி கரும்பாயிரம்(49) ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது ெதரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story