மணல்மேடு அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வெற்றி
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: மணல்மேடு அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்
மயிலாடுதுறை
மணல்மேடு:
மயிலாடுதுறை மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்னர். இவர்கள் ஆண்கள் கபடி போட்டியில் 2-ம் இடத்தையும், குண்டு எறிதலில் 3-ம் இடத்தையும் பிடித்தனர். அதேபோல மாணவிகள் கபடி போட்டியில் 3-ம் இடத்தையும், கூடைப்பந்து போட்டியில் 3-ம் இடத்தையும் பிடித்தனர். இதன் மூலம் மணல்மேடு கல்லூரி மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவ - மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குனர் கோகுல கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story