நந்தவன காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்


நந்தவன காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
x

வடக்குபொய்கைநல்லூர் நந்தவன காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே வடக்குபொய்கை நல்லூரில் நந்தவன காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தயிர், திரவியபொடி உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேக, ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது..இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story