வண்டுறை மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்


வண்டுறை மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
x

நவராத்திரி விழாவையொட்டி வண்டுறை மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவில் நவராத்திரி விழாவின் 5-வது நாளையொட்டி மாரியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், திருநீறு, உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் சந்தனகாப்பு சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story