சந்தனக்கூடு திருவிழா


சந்தனக்கூடு திருவிழா
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் பெரிய பள்ளிவாசலில் உள்ள சையது ஹமீதுல் ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதையொட்டி நாகூரில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித சந்தனம், குடத்தில் நிரப்பப்பட்டு தர்காவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம், நத்தம் சந்தனகுட தெரு, பெரியகடை வீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக வந்து மீண்டும் தர்காவை சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு மல்லிகைப்பூ மாலைகள் அணிவித்து, சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடும் நடந்தது. இந்த திருவிழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், வர்த்தகர் சங்க தலைவர் சேக்ஒலி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் வக்கீல் முகமது சாலியா, சையது அபுல்பத்க் சாகிபு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story