கமுதி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா தொடக்கம்
கமுதி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா தொடங்குகிறது.
ராமநாதபுரம்
கமுதி,
கமுதியில் பிரசித்தி பெற்ற முஸாபர் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கமுதி- சுந்தரபுரத்தில் உள்ள தைக்கா வீட்டில் இருந்து சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியை கண்மாய் கரையில் உள்ள முஸாபர் அவுலியா தர்காவிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.பின்னர் தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி கொடியை ஏற்றினார்.இந்நிகழ்ச்சியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 1000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். வருகிற 27-ந் தேதி இரவு சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.
Related Tags :
Next Story