பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு ஊர்வலம்
பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.
கரூர்
அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் 263-ம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தர்கா வளாகத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கி பள்ளப்பட்டியின் முக்கிய வீதிகள் வலம் வந்தது. பின்னர் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் தர்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் திரளான பொதுமக்கள் சந்தனம் பூசி பிரார்த்தனை செய்தனர். விழாவையொட்டி தர்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story