சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது


சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 4:03 PM IST)
t-max-icont-min-icon

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

கந்தூரி விழா

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கந்தூரி விழா கடந்த மாதம்(டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு தர்கா அலங்கார வாசலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

சந்தனக்கூடு ஊர்வலம்

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரவு 8 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று அதிகாலை நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடையும். இதை தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.


Next Story