விராலிமலை முருகன் கோவிலில் சங்காபிஷேகம்


விராலிமலை முருகன் கோவிலில் சங்காபிஷேகம்
x

விராலிமலை முருகன் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலைமலையில் பிரசித்திபெற்ற முருகன்கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சங்காபிஷேகம் மற்றும் மலை மேல் உள்ள முருக பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் திங்கட்கிழமை (சோம வாரம்) முன்னிட்டு நேற்று மலைமேல் உள்ள முருகனுக்கு 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story