கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:15:29+05:30)

தகட்டூர் சமத்துவபுரம் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தகட்டூர் சமத்துவபுரம் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார சீர்கேடு

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சமத்துவபுரம் பகுதியில் கிராம ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு மாணவிகள் விடுதி, கிராம சேவை கட்டிடம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் குப்பைகள் அதிக அளவில் கொட்டி வருகின்றனர். மேலும் இந்த குப்பைகளை எரித்து விடுகின்றனர். அந்த குப்பைகள் அங்கேயே அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகட்டூர் சமத்துவபுரம் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி சுகாதார சீ்ர்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும். இல்லையெனில் குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story