ரெயில் மோதி தூய்மை பணியாளர் சாவு


ரெயில் மோதி தூய்மை பணியாளர் சாவு
x

அய்யலூர் அருகே ரெயில்மோதி தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

அய்யலூர் களர்பட்டியை சேர்ந்தவர் நல்லு. அவருடைய மனைவி வரதம்மாள் (வயது 42). இவர், அய்யலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இந்தநிலையில் அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோவில் அருகே, கடந்த 27-ந்தேதி வரதம்மாள் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில், வரதம்மாளின் வலது கால் துண்டிக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வரதம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story