திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா


திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களாக 172 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய சம்பளத்தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று நகராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த நகராட்சி அதிகாரிகள் துப்புரவு தொழிலாளர்களின் சட்ட ஆலோசகர் ஜெயராஜ் மற்றும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்குவதாக உறுதி அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story