துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை தொ.மு.ச. துப்புரவு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். தலைவர் முருகன், துணைத்தலைவர் நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள மருத்துவ விடுப்பு ஊதியம், ஈட்டிய விடுப்பு ஊதியம், சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டும், பிற்கால சேமநல நிதி வட்டி தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு காலதாமதம் செய்யாமல் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், மறைந்த தூய்மைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டிய பணி பயன்களை உடனே வழங்க வேண்டும், தற்போது உபயோகத்தில் உள்ள நகராட்சி பொது சுகாதாரப்பிரிவு ஆய்வாளர் அலுவலகத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துப்புரவு தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்