சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா


சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா
x

சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றையதினம் மாலையில் மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்டு ஜே அடிகளார் தலைமை வகித்து கொடியேற்றினார். நவநாட்களில் ஆலயத்தில் பல்வேறு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. 9-ம் திருநாளான 27-ந் தேதி காலை 6 மணிக்கு அருள்தந்தை அருள்மணி ரெக்ஸ் தலைமையில் திருப்பலி, பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபர் வெனிஸ்குமார் மறையுரை ஆற்றினார். அருள்தந்தை விஜயன், குறுக்குச்சாலை பங்குத்தந்தை மரியதுரை, தும்முகிணாம்பட்டி பங்குத்தந்தை இருதயராஜ் ஆகியோர் திருவிழா ஆராதனை நடத்தினர். இரவு 9 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி நடைபெற்றது. 28-ந் தேதி அருள்தந்தை நெல்சன்பால்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி, புதுநன்மை வழங்குதல் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலயபங்கு தந்தை இருதயசாமி தலைமையில் பங்குமக்கள் செய்திருந்தனர்.


Next Story