கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு


கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு
x

கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு நடந்தது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நேற்று சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு கன்னி மூலையில் வீற்றிருக்கும் விநாயக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயக பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயக பெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. விநாயகர் அகவல் உள்ளிட்ட பல்வேறு பதிகங்கள் பாடி பக்தர்கள் வழிபட்டனர்.


Next Story