ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்


ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஊட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டாகிளாஸ்) ஊர்வலம் நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று அனைத்து திருச்சபைகள் சார்பில், ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமாக வந்தார். இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. புனித தாமஸ் ஆலயத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. பஸ் நிலையம், லோயர் பஜார், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நிறைவடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



Next Story