சாந்த முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


சாந்த முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் உள்ள சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் உள்ள சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி முதல் நாள் கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் 10-ம் நாளான கடந்த 13-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி, அலகு காவடி, பால் காவடி எடுத்து வந்து கோவிலின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Next Story