மரக்கன்றுகள் நடும் விழா
மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே காவேரி நகரில் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் மரமும் மனிதனும் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் மா, பலா, அத்தி, நாவல், முழுநெல்லி, இலுப்பை, சீனச்செர்ரி, வாதாம், மகாகனி, கொன்னை, புங்கை, மலைவேம்பு உள்பட 60 மரக்கன்றுகள் பள்ளிவாசல் வளாகத்தில் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக என்ஜினீயர் சையத் இப்ராஹிம், தொழிலதிபர்கள் நாகராஜ், விக்னேஷ், தீன், மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனரும், மாங்குடி, அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியருமான முகம்மது ஆசிம் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். மேலும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story