கரூர் ரெயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா


கரூர் ரெயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
x

கரூர் ரெயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கரூர்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் சஞ்சய் சந்தர் அறிவுறுத்தலின்படி கரூர் ரெயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு கரூர் ரெயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணா தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த சிறுவர், சிறுமியர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story