தூத்துக்குடி சுங்கத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா
தூத்துக்குடி சுங்கத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி:
இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சுங்கத்துறை சார்பில் நாடு முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி தூத்துக்குடி சுங்கத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா சுங்க கோட்ட அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு சுங்கத்துறை உதவி ஆணையர் நரசிம்மன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டினார். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டினர். நிகழ்ச்சியில் திரளாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story