மரக்கன்றுகள் வழங்கும் விழா


மரக்கன்றுகள் வழங்கும் விழா
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மல்லி ஆறுமுகம் தலைமையில் கருணாநிதி பிறந்தநாளைெயாட்டி ஒன்றியத்தில் உள்ள 99 இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மல்லி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், யூனியன் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவி கண்ணன், நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, நகர செயலாளரும் கவுன்சிலருமான அய்யாவு பாண்டியன், கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்நிலையம் அருகே கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் வழங்கினர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு நகர்மன்ற தலைவர் இலவசமாக வழங்கினார். மேலும் 33 வார்டுகளில் நகர செயலாளர் அய்யாவு பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் கொடி ஏற்றப்பட்டது, இதில் கவுன்சிலர்கள் சிவகுமார், சுரேஷ், முத்துமாரி புதுமாடன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தூய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


Next Story