அனைத்து தெருக்களிலும் மரக்கன்றுகள் நட வேண்டும்
விக்கிரவாண்டியில் அனைத்து தெருக்களிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து தெருக்களிலும் மரக்கன்றுகள் நட வேண்டு்ம், அங்காளம்மன் கோவில் எதிரில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைத்தல், வெங்கடேஸ்வரா நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மன்ற உறுப்பினர்கள் கனகா, சுரேஷ், ரமேஷ், ரேவதி, புஷ்பராஜ், ஆனந்தி, வீரவேல், சுதா, சுபா, வெண்ணிலா, பவானி, பிரியா, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story