மகன் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண்


மகன் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 11:07 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே விவசாயி கொலை தொடர்பாக மகன் உள்பட 2 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

தர்மபுரி

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மாவடிப்பட்டி தெற்கத்தியான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 52). விவசாயி. இவர் கடந்த மாதம் 18- ந்தேதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கூலிப்படையை ஏவி விவசாயி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலரை போலீசார் தேடி வந்தனர்.

கோர்ட்டில் சரண்

இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்ட முனியப்பனின் மகன் திருமலை மற்றும் கூலிப்படையை சேர்ந்த பிரசாந்த் ஆகியோர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். தந்தை கொலை வழக்கில் மகன் கோர்ட்டில் சரண் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story