சிறுமியின் கழுத்தில் புடவை இறுக்கி சாவு
கண்ணமங்கலம் அருகே தம்பியுடன் ஊஞ்சலாடிய சிறுமியின் கழுத்தில் புடவை இறுக்கி பரிதாபமாக இறந்தாள்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே தம்பியுடன் ஊஞ்சலாடிய சிறுமியின் கழுத்தில் புடவை இறுக்கி பரிதாபமாக இறந்தாள்.
ஊஞ்சல் ஆடினாள்
கண்ணமங்கலத்தை அடுத்த கொங்கராம்பட்டு சித்ரசாவடி கேட்டில் வசிப்பவர்கள் அரிபாபு-விஜயலட்சுமி. அரிபாபு லாரி டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
இவர்களுக்கு ரூபினா (வயது 7) என்ற மகளும், யஷ்வந்த் (4) என்ற மகனும் உண்டு.
இந்த நிலையில் இன்று மதியம் ரூபினா, தனது தம்பி யஷ்வந்த் உடன் வீட்டு வராண்டாவில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது ரூபினா கழுத்தில், புடவை இறுக்கி மயக்கமடைந்தாள். உடனடியாக ரூபினாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாவு
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து ரூபினா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.