சர்வேசுரர் கோவில் கும்பாபிஷேக விழா


சர்வேசுரர் கோவில் கும்பாபிஷேக விழா
x

அபிராமபுரம் பகுதியில் உள்ள சர்வேசுரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அபிராமபுரம் பகுதியில் மிகவும் பழமையான சிவகாமவல்லி உடனுறை சர்வேசுரர் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் உள்பட ஹோமங்கள் நடந்தன.

இதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கால பூஜை நடைபெற்று கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து மூலவருக்கும், சிவகாமவல்லி தாயார், நவகிரகங்கள், பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள், தலைமை நாட்டாண்மைதாரர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


Next Story