சாத்தான்குளம் அரசு பஸ்சில் திடீர் உடல்நலக்குறைவு; பயணிகளை காப்பாற்றிய டிரைவர்


சாத்தான்குளம் அரசு பஸ்சில்  திடீர் உடல்நலக்குறைவு;   பயணிகளை காப்பாற்றிய டிரைவர்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அரசு பஸ்சில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும், பஸ்சை சாலைஓரம் நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

நெல்லை அருகே சாத்தான்குளம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும், சாலையோரத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார். அவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் பஸ்

நெல்லையில் இருந்து சாத்தான்குளத்திற்கு நேற்று முன்தினம் அதிகாலை 5.10 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. டிரைவர் ரமேஷ்(வயது 48) பஸ்ைச ஓட்டிச் சென்றார். நடத்துனராக வேலுச்சாமி பணியில் இருந்தார். பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர். பாளையங்கோட்டை அடுத்துள்ள ரெட்டியார்பட்டி தாமரைச்செல்வி என்ற இடத்தில பஸ் சென்றபோது, டிரைவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் தொடர்ந்து அவர் பஸ்சை இயக்கினார்.

பஸ்சில் மயங்கினார்

பருத்திப்பாடு என்ற இடத்தில் சென்றபோது டிரைவருக்கு மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு ஸ்டீயரிங்கில் சாய்ந்த நிலையில் மயங்கினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே பயணிகள் அனைவரும் மாற்று வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பொதுமக்கள் பாராட்டு

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் பஸ்சை சாலையோரம் நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவருக்கு பயணிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிரைவர் ரமேஷ் தற்போது நலமுடன் இருக்கிறார்.


Related Tags :
Next Story